27 6 2024 இன்று அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் படித்த ஏழை மாணவ மாணவியர்களுக்கு இய கத்தின் நிறுவனர், டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் அவர்கள் பயிரியிடும் காலத்தே பயிர் செய்தால், எதிர்காலத்தை செழுமையாக்கி கொள்ளலாம் என்ற கூர்மை நோக்கோடு படித்து பட்டம் பெற இருக்கின்ற ஏழை மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு,கல்வி கட்டண நிதி உதவியை அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் காசோலையாக வழங்கினார். பள்ளி,கல்லூரி ஏழை மாணவ மாணவியர்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பெரும்பாக்கம், செம்மஞ்சேரி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் திவ்யா அவர்களும் உடன் இருந்தார்கள். மாதம்தோறும் ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டண நிதி வழகும் விழா நடைபெறுவதாக உன் தேடல் உன்னோடு தான் பயிற்சி மையத்தின் நிர்வாகி திருமதி.கீதா அவர்கள் தெரிவித்தர். இயக்க நிர்வாகிகள் எழுத்தாளர் தாம்பரம் பொன் வீர் ஜெயப்பிரகாசம், ஆசிரியர் நிலவழகன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.