11-07-2022 அன்று கடம்பத்தூர் ஊராட்சி பஞ்சாயத்து, வேலஞ்சேரி கிராமத்தில், சுமார் 200 குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் 15 நாட்களுக்குள், இப்பகுதி மக்கள், தங்களின் வீடுகளை காலிசெய்துவிட வேண்டும் என்று நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. இதனால் பெரும் இன்னலுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளான மக்களின் நிலையை உணர்ந்து, அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்தித்து, அம்மக்களின் கோரிக்கையை ஏற்று வேலஞ்சேரி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளிலேயே இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்