🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!     🔔 அனைத்து மக்கள் சக்தி இயக்கம்     🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!    
Home About Ideology Moments Activities Contact

அனைத்து மக்கள் சக்தி இயக்கம்

About Image

அனைத்து மக்கள் சக்தி இயக்கம் என்பது மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, அவர்களை அதிகாரப்படுத்தி, ஒரு மாற்று சமூக-அரசியல் நடைமுறையை உருவாக்கும் நோக்கில் 2021 ஆம் ஆண்டு டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு சமூக-அரசியல் மாற்ற இயக்கமாகும்.

About
மக்கள் இயக்கத்தின் குரல்

டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் நிறுவனர் & தலைவர்

சாதாரண வாழ்க்கையிலிருந்து சமூக மாற்றத்தின் பயணம் வரை – உழைப்பின் மூலம் உயர்ந்தவர், மக்களின் குரலாக உருவெடுத்த தலைவர். ஏழை மக்களின் வலியும், இளைஞர்களின் கனவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமையும் அவரின் அரசியல் சிந்தனையின் மையமாக உள்ளது.

மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான அரசியல் என்ற நம்பிக்கையுடன், 2021 ஆம் ஆண்டு அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கினார்.

  • அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அறிந்த தலைவர்
  • இளைஞர்களை முன்னிலைப்படுத்தும் சிந்தனை
  • சாதி, மத பேதமற்ற அரசியல் பார்வை
  • நடைமுறை சமூக சேவை அனுபவம்
  • மாற்று அரசியலுக்கான தெளிவான நோக்கு
உறுப்பினராக
மக்களின் வாழ்வு உயர்ந்தால் தான் அரசியல் அர்த்தமுள்ளதாகும்.

மக்கள் ஒன்றிணைந்தால் மாற்றம் உறுதி.

மக்கள் அதிகாரம், சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய அடிப்படைகளை முன்னிறுத்தி, மாற்று அரசியல் சிந்தனையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் செயல்படும் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தேசிய தலைவராக டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

மக்கள் அதிகாரமே எங்கள் தொலைநோக்கு , மக்கள் முன்னேற்றமே எங்கள் பணி

அனைத்து மக்கள் சக்தி இயக்கம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, சமத்துவம், சமூக நீதி மற்றும் மக்கள் அதிகாரத்தை உருவாக்கும் நோக்குடன் செயல்படும் ஒரு மாற்று சமூக–அரசியல் இயக்கமாகும்.

Mission Statement

மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, இளைஞர்களை சமூக-அரசியல் மாற்றத்திற்கு வழிநடத்தி, மக்கள் சக்தியை ஒன்றிணைத்து மாற்று அரசியலை உருவாக்குவது எங்கள் பணி.

Our Vision

சாதி, மத வேறுபாடுகள் இல்லாத சமத்துவம் மற்றும் ஒற்றுமை நிறைந்த சமூகத்தை உருவாக்கி, அனைத்து மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்வதே எங்கள் தூரநோக்கு.

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் கோட்பாடுகள்

அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சமத்துவம், சமூக நீதி மற்றும் மக்கள் அதிகாரம் என்ற அடிப்படைகளில் தனது கொள்கைகளை வகுத்துள்ளது.

01

சமத்துவ சமூகம்

சாதி, மத, மொழி வேறுபாடுகள் இல்லாமல், அனைவரும் சமமாக வாழும் சமூகத்தை உருவாக்குவதே எங்கள் அடிப்படை கோட்பாடாகும்.

02

மக்கள் அதிகாரம்

அரசியல் அதிகாரம் சிலரிடமே இல்லாமல், அனைத்து மக்களிடமும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் இயக்கத்தின் நோக்கமாகும்.

03

சமூக நீதி

ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாத்து, நியாயமான சமூக அமைப்பை உருவாக்குவதே எங்கள் கோட்பாடு.

04

இளைஞர் முன்னிலை

இளைஞர்களின் ஆற்றல் மற்றும் சிந்தனையை சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கு பயன்படுத்தி, நாளைய தலைமுறையை உருவாக்குவது.

05

மக்கள் ஒற்றுமை

மக்களிடையே அமைதி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்த்தெடுப்பதே எங்கள் இயக்கத்தின் முக்கிய அடையாளம்.

06

சேவை மைய அரசியல்

அரசியலை அதிகாரம் பெறும் கருவியாக அல்ல, மக்களுக்கு சேவை செய்யும் வழியாக நடைமுறைப்படுத்துவதே எங்கள் கொள்கை.

07

மாற்று அரசியல்

பாரம்பரிய அரசியலைத் தாண்டி, மக்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நடைமுறையை உருவாக்குவது.

4000
+ Donation
1200
+ Members
10000
+ Social Service
4
+ Years Service

மக்கள் சக்தி இயக்கத்தின் தலைமை குழுவினர்கள்

அனைத்து மக்கள் சக்தி இயக்கம், மக்கள் சேவையை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அர்ப்பணிப்புள்ள தலைமை குழுவினரால் முன்னெடுக்கப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, தீர்வுகளை உருவாக்கும் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் இத்தலைமைகள், இயக்கத்தின் வலிமையும் அடையாளமும் ஆகும்.

நிகழ்வுகள் & தகவல்கள்

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் சமூக விழிப்புணர்வு பதிவுகளை இந்தப் பகுதியில் அறிந்து கொள்ளலாம். இயக்கத்தின் செயல்பாடுகள், மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இங்கு புதுப்பிக்கப்படும்.

Thumb

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சா...

27 6 2024 இன்று அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் படித்த ஏழை மாணவ மாணவிய...

Read More
Thumb

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம்...

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்ப...

Read More
Thumb

மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்...

மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், ஏழை எளிய மக்களுக்கு அனைத்து மக்கள...

Read More
Thumb

வேலஞ்சேரி கிராமத்தில், வசிக்கும் சு...

11-07-2022 அன்று கடம்பத்தூர் ஊராட்சி பஞ்சாயத்து, வேலஞ்சேரி கிராமத்தில், சுமார் 2...

Read More

உங்கள் பங்களிப்பே மாற்றத்தின் தொடக்கம்

ஒரு சிறிய முயற்சியும் பெரிய மாற்றத்தை உருவாக்கும். மக்களுக்காக செயல்படும் இந்த இயக்கத்தில் இணைந்து சமூக முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்குங்கள்.